திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 221 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
221பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 9
வானத் தெழுந்த மழை முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து களித்து விளையாடி ஏனத் துருவாய் இடந்தஇம் மண்ணினை தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி யிடந்தானால் இன்று முற்றும்–2-10-9
பதவுரை Show / Hide
வானத்து,Vaanaththu - (கடலில் நீரை முகந்து கொண்டு) ஆகாசத்திலே
எழுந்து,Ezhandhu - கிளம்பின
மழை முகில் போல்,Mazhai Mugil Pol - வர்ஷிக்கப் புக்க மேகம் போல
ஏனத்து உரு ஆய்,Eenaththu Uru Aai - (கறுத்த நிறத்தை யுடைய) ஒரு வராஹத்தின் ரூபமாய் (அவதரித்து)
கானத்து,Kaanaththu - காடு நிலங்களில்
எங்கும்,Engum - எல்லாவிடத்திலும் (திரிந்து)
மேய்ந்து,Meindhu - (கோரைக் கிழங்கு முதலியவற்றை) அமுது செய்து
களித்து,Kaliththu - செருக்கடைந்து
விளையாடி,Vilaiyaadi - விளையாடி,
இடந்த,Edandha - (பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போன ஹிரண்யாக்ஷனைக் கொன்று) (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த
இம் மண்ணினை,Em Manninai - இந்தப் பூமியை
தானத்தே,Thaanaththae - யதாஸ்தாநத்தில்
வைத்தானால்,Vaiththaanal - (கொணர்ந்து) வைத்து நிலை நிறுத்தின கண்ண பிரானால்
இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
தரணி,Dharani - (இப்படி கடலில் மூழ்கிப் போன) பூமியை
இடந்தானால்,Edandhaan - கோட்டாற் குத்தி எடுத்துக் கொணர்ந்த கண்ண பிரானால்
இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;