| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 222 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 10 | அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு மங்கை நல் லார்கள் தாம் வந்து முறைப்பட்ட அங்கவர் சொல்லைப் புதுவைக் கோன் பட்டன் சொல் இங்கிவை வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே–2-10-10 | நல் மங்கைமார்கள் தாம்,Nal Mangaimargal Thaam - (பகவத் ப்ரேமமாகிற) நன்மை பொருந்திய (இடைப்) பெண்கள் அம் கமலம்,Am Kamalam - அழகிய செந்தாமரைப் பூப்போன்ற கண்ணன் தன்னை,Kannan Thannai - கண்களை யுடைய கண்ணபிரான் (செய்த தீம்பு) விஷயமாக அங்கு வந்து,Angu Vandhu - அந்தக் கண்ண பிரானுடைய வீட்டுக்கு வந்து அசோதைக்கு,Asothaiyukku - (அவன் தாயான) யசோதைப் பிராட்டி யிடத்திலே முற்பட்ட,Murppatta - (தங்கள் ஆர்த்திதோற்றக்) கதறிச் சொன்ன அவர் சொல்லை,Avar Sollai - அவ் விடைச்சிகளின் சொல்லை, புதுவை,Puthuavai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattam - பெரியாழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த இவை,Evai - இப் பாசுரங்களை இங்கு,Engu - இந்த ஸம்ஸாரத்தில் (இருந்து கொண்டே) வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு ஒன்று ஏதம்,Onru Aedham - ஒரு வகைக் குற்றமும் இல்லை,ellai - இல்லையாம். |