Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 223 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
223ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 1
தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்
பொன்னேய் நெய்யொடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3-1-1
தன் நேர்,Than Ner - (வயஸ்ஸாலும் வளர்த்தியாலும்) தன்னோடு ஒத்த
ஆயிரம் பிள்ளைகளோடு,Ayiram Pillaihalodu - ஆயிரம் பிள்ளைகளோடு கூட
தளர் நடை இட்டு,Thalar Nadai Ittu - தளர் நடை நடந்து
வருவான் ,Varuvaan - வருகின்ற கண்ணபிரானே!
பொன் ஏய்,Pon Ey - (நிறத்தால்) பொன்னை ஒத்திரா நின்ற
நெய்யோடு,Neyyodu - நெய்யோடு கூட
பால் அமுது,Paal Amuthu - போக்யமான பாலையும்
உண்டு,Undu - (இடைச்சேரியில் களவு கண்டு) அமுது செய்து
பொய்யே,Poiye - (ஒன்றுமறியாத பிள்ளை போல்) கபடமாக
தவழும்,Thavazhum - தவழ்ந்து வருகின்ற ஒரு புள்ளுவநொப்பற்ற கள்ளனே!
மின் நேர்,Min Ner - மின்னலைப் போன்று
நுண்,Nun - அதி ஸூக்ஷ்மமான
இடை,Idai - இடையையும்
வஞ்சம்,Vanjam - வஞ்சனையையுமுடையளான
மகள்,Magal - பூதனை யென்னும் பேய் மகள்
துஞ்ச,Thunja - மாண்டு போம்படி
கொங்கை,Kongai - (அவளுடைய) முலையிலே
வாய் வைத்த,Vaai Vaitha - தன்னுடைய வாயை வைத்து (சுவைத்து)
பிரானே,Pranane - நாயனே
உன்னை,Unnai - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை
அறிந்து கொண்டேன்,Arindhu Kondean - (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
உனக்கு,Unakku - (ஆதலால் ) உனக்கு
அம்மம் தர,Ammam Thara - முலை கொடுக்க
அஞ்சுவன்,Anjuvan - பயப்படா நின்றேன்
அன்னே,Anne - அன்னே- அச்சக் குறிப்பிடைச் சொல்