| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 224 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 2 | பொன் போல் மஞ்சன மாட்டி அமுதூட்டிப் போனேன் வருமளவு இப் பால் வன் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கிருந்து மின் போல் நுண்ணிடையால் ஒரு கன்னியை வேற்றுருவம் செய்து வைத்த அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-2 | பொன் போல்,Pon Pol - பொன்னைப் போல் மஞ்சனம் ஆட்டி,Manjanam Aatti - (உன் வடிவழகு விளங்கும்படி) (உன்னைத்) திருமஞ்சனம் செய்வித்து அமுது ஊட்டி,Amuthu Ootti - (அதன் பிறகு) அமுது செய்யவும் பண்ணி விட்டு போனேன்,Ponen - (யமுனை நீராடப்) போன நான் வரும் அளவு இப் பால்,Varum Alavu Ip Paal - (மீண்டு) வருவதற்குள்ளே வல்,Val - வலி வுள்ளதும் பாரம்,Baaram - கனத்ததுமாயிருந்த சகடம்,Sakadam - சகடமானது மிற,Mira - (கட்டுக் குலைந்து) முறியும்படி சாடி,Saadi - (அதைத் திருவடியால்) உதைத்துத் தள்ளி வடக்கில் அகம்,Vadakkil Agam - (அவ்வளவோடும் நில்லாமல்) (இவ் வீட்டுக்கு) வடவருகிலுள்ள வீட்டிலே புக்கு இருந்து,Pukku Irundhu - போய் நுழைந்து மின் போல் நுண் இடையால்,Min Pol Nun Idaiyaal - (அவ் வீட்டிலுள்ள) மின்னலைப் போன்ற நுட்பமான இடையை யுடையளான ஒரு கன்னியை,Oru Kanniyai - ஒரு கன்னிகையை வேறு உருவம் செய்து வைத்த,Veru Uruvam Seidhu Vaitha - (கலவிக் குறிகளால்) வேறுபட்ட வடிவை யுடையளாகச் செய்துவைத்த அன்பர்,Anbar - அன்பனே! உன்னை,Unnai - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை அறிந்து கொண்டேன்,Arindhu Kondean - (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன் உனக்கு,Unakku - (ஆதலால் ) உனக்கு அம்மம் தர,Ammam Thara - முலை கொடுக்க அஞ்சுவன்,Anjuvan - பயப்படா நின்றேன் |