திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 225 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
225பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 3
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத் தயிர் சாய்த்துப் பருகி பொய்ம் மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்று நீ வந்தாய் இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே யென்பர் நின்றார் அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-3
பதவுரை Show / Hide
கும்மாயத்தோடு,Kummaayathodu - (கண்ணபிரானே!) குழையச் சமைத்த பருப்பையும்
வெண்ணெய்,Vennai - வெண்ணெயையும்
விழுங்கி,Vizhunghi - விழுங்கி விட்டு
குடம் தயிர்,Kudam Thayir - குடத்தில் நிறைந்த தயிரை
சாய்த்து,Saaythu - (அந்தக் குடத்தோடு) சாய்த்து
பருகி,Parugi - குடித்தும்
பொய் மாயம் மருது ஆன அசுரரை,Poi Maayam Marudhu Aana Asurarai - பொய்யையும் மாயச் செய்கையை யுமுடைய அஸுரர்களால் ஆவேசிக்கப் பெற்ற (இரட்டை) மருத மரங்களை
பொன்று வித்து,Ponru Viththu - விழுந்து முறியும் படி பண்ணியும்
நீ,Nee - (இவ்வளவு சேஷ்டைகளைச் செய்த) நீ
இன்று,Indru - இப்போது
வந்தாய்,Vandhai - (ஒன்றுஞ் செய்யாதவன் போல) வந்து நின்றாய்;
இம் மாயம்,Em Maayam - இப்படிப்பட்ட மாயச்செய்கைகளை
வல்ல,Valla - செய்ய வல்ல
பிள்ளை,Pillai - பிள்ளாய்!
நம்பி,Nambi - (அந்தப் பிள்ளைத் தனத்தால்) பூர்ணனானவனே!
உன்னை,Unnai - (இப்படி யிருக்கிற) உன்னை
நின்றார்,Ninraar - (உன் வாசி அறியாத) நடு நின்றவர்கள்
என் மகனே என்பர்,En Magane Enpar - என் (வயிற்றிற் பிறந்த) சொல்லா நின்றார்கள்;(நானோ வென்றால் அப்படி நினையாமல்)
உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Kondean - (இவன் ஸர்வேச்வரன் என்று) உன்னைத் தெரிந்து கொண்டேன்;
அம்மா,Amma - (ஆதலால்,) ஸர்வேச்வரனே!
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன்