திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 226 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
226பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 4
மை யார் கண்ட மட வாய்ச்சியர் மக்களை மை யன்மை செய்து அவர் பின் போய் கொய்யார் பூந் துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தாய் பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ புத்தகத்துக்குள கேட்டேன் ஐயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-4
பதவுரை Show / Hide
மை ஆர் கண்,Mai Aar Kan - மையை அணிந்துள்ள கண்களையும்
மடம்,Madam - மடப்பம் என்ற குணத்தை யுமுடையரான
ஆய்ச்சியர் மக்களை,Aaychiyar Makkalai - இடைப் பெண்களை
மை யன்மை செய்து,Mai Yanmai Seithu - (உன் விஷயத்திலே) மோஹிக்கப் பண்ணி
கொய் ஆர் பூ துகில்,Koi Aar Poo Thugil - (அப் பெண்களுடைய) கொய்தல் நிறைந்த அழகிய புடவைகளை
பற்றி,Patri - பிடித்துக் கொண்டு
அவர் பின் போய்,Avar Pin Poi - அப் பெண்களின் பின்னே போய்
தனி நின்று,Thani Nindru - தனி யிடத்திலே நின்று
பல பல குற்றம்,Pala Pala Kutram - எண்ணிறந்த தீமைகளை
செய்தாய்,Seithai - (நீ) பண்ணினாய்;
பொய்யா,Poiyaa - (என்று யசோதை சொல்ல,’ நீ கண்டாயோ?’ என்று கண்ணன் கேட்க)
(அதற்கு யசோதை சொல்கிறாள்;)
(தீ மை செய்தது மல்லாமல், செய்ய வில்லை யென்று) பொய் சொல்லுமவனே!

உன்னை,Unnai - உன்னைக் குறித்து
புத்தகத்துக்கு உள,Puthagathukku Ula - ஒருபுஸ்தக மெழுதுகைக்குத் தகுந்துள்ளனவாம்படி
பேசுவ,Pesuva - சொல்லப் படுகின்றனவான
பல புறம்,Pala Puram - பற்பல உன் சொற்கள்
கேட்டேன்,Kettaen - (என் காதால்) கேட்டிருக்கின்றேன்;
ஐயா,Ayya - அப்பனே
உன்னை,Unnai - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை
அறிந்து கொண்டேன்,Arindhu Konden - (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
உனக்கு,Unakku - (ஆதலால் ) உனக்கு
அம்மம் தர,Ammam Thara - முலை கொடுக்க
அஞ்சுவன்,Anjuvan - பயப்படா நின்றேன்