| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 227 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 5 | முப்போதும் கடைந் தீண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி கப்பாலாயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி மெய்ப்பாலுண்டழு பிள்ளைகள் போலந விம்மி விம்மி யழுகின்ற அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-5 | முப்போதும்,Muppothum - மூன்று சந்திப் போதுகளிலும் கடைந்து,Kadaindhu - (இடையரால்) கடையப் பட்டு ஈண்டிய,Eindiya - திரண்ட வெண்ணெயினோடு,Venneyinodu - வெண்ணையையும் தயிரும்,Thayirum - தயிரையும் விழுங்கி,Vizhunki - (களவு கண்டு) விழுங்கி, ஆயர்கள்,Aayargal - (அவ்வளவோடும் நில்லாமல்) அவ்விடையர்கள் (தம்முடைய) கப்பால்,Kappal - தோளாலே (வருந்திச் சுமந்து) காவில்,Kavil - காவடியில் கொணர்ந்த,Konarntha - கொண்டு வந்த பால் முதலியவற்றை கலத்தொடு,Kalathodu - (அந்தப்) பாத்திரத்தோடே சாய்த்து,Saithu - சாய்த்து பருகி,Parugi - குடித்தும் மெய் பால் உண்டு அழுகிற பிள்ளைகள் போல விம்மி விம்மி அழுகின்ற,Mei Paal Undu Alugira Pillaihal Pola Vimmi Vimmi Alugindra - (அதனால் பசி யடங்கின படியை மறைக்க நினைத்து) முலைப் பாலை உண்டு (அது பெறாதபோது) அழுகிற பிள்ளைகளைப் போலே விக்கி அழுகின்ற அப்பா,Appa - பெரியோனே! உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன் |