திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 228 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
228பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 6
கரும்பார் நீள் வயல் காய் கதிர்ச் செந்நெலைக் கற்றா நிரை மண்டித் தின்ன விரும்பாக் கன்றொன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே சுரும்பார் மென் குழல் கன்னி யொருத்திக்குச் சூழ் வலை வைத்துத் திரியும் அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-6
பதவுரை Show / Hide
நீள் வயல்,Neel Vayal - பரந்த வயலிலே
கரும்பு ஆர்,Karumbu Aar - கரும்பு போலக் கிளர்ந்துள்ள
காய்,Kaai - பசுங்காயான
கதிர்,Kathir - கதிரையுடைய
செந்நெலை,Sennelai - செந்நெல் தாந்யத்தை
கன்று ஆ நிரை,Kanru Aa Nirai - கன்று களோடு கூடின பசுக்களின் திரள்
மண்டி தின்ன,Mandi Thinna - விரும்பித் தின்னா நிற்கச் செய்தே
விரும்பா கன்று ஒன்று,Virumbaa Kanru Ondru - (அத்திரளிலே சேர்ந்து மேய்கிறாப்போல் பாவனை செய்த அஸுராவிஷ்டமான) (நெல்லைத் தின்கையில்) விருப்பமில்லாத ஒரு கன்றை
கொண்டு,Kondu - (அதன் செய்கையினாலே ‘இது ஆஸுரம்’ என்று அறிந்து) (அதனைக் குணிலாகக்) கொண்டு, (மற்றொரு அஸுரனால் ஆவேசிக்கப்பட்டிருந்த)
விளங்கனி,Vilangani - விளாமரத்தின் பழங்கள்
வீழ,Veezha - உதிரும்படி
எறிந்த ,Erindha - (அவ்விளாமரத்தின் மேல் அக்கன்றை) வீசியெறிந்த
பிரானே,Piraane - பெரியோனே!
சுரும்பு ஆர்,Surumbu Aar - வண்டுகள் நிறைந்த
மென் குழல்,Men Kuzhal - மெல்லிய குழலை யுடையனான
கன்னி ஒருத்திக்கு,Kanni Oruththikku - ஒரு கன்னிகையை அகப்படுத்திக் கொள்வதற்காக
சூழ் வலை,Soozh Valai - (எல்லாரையும்) சூழ்ந்து கொள்ளக் கடவ (திருக் கண்களாகிற) வலையை
வைத்து,Vaiththu - (அவள் திறத்திலே விரித்து) வைத்து
திரியும்,Thiriyum - (அந்ய பரரைப் போலத்) திரியா நின்ற
அரம்பா,Arambaa - தீம்பனே!
உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன்