திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2282 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2282மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – எம்பெருமான் கடல் கடைய தேவர்கள் நடு நின்றால் போலே முன்புற்றை ஆழ்வார்கள் பிரசாததத்தாலே கண்டு கொண்டு நின்றேன் என்கிறார் – அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் – 1
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழு மருக்கனணிநிறமுங் கண்டேன்* செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்* என்னாழி வண்ணன்பா லின்று
பதவுரை Show / Hide
இன்று, Indru - எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷம்பெற்ற இப்பொது
என் ஆழி வண்ணன் பால், En Aazhi Vannan Paal - கடல்வண்ணனான எம்பெருமானிடத்திலே
திரு, Thiru - பெரிய பிராட்டியாரை
கண்டேன், Kandeen - ஸேவிக்கப்பெற்றேன்,
பொன் மேனி, Pon Meeni - அழகிய திருமேனியையும்
கண்டேன், Kandeen - ஸேவிக்கப் பெற்றேன்
திகழும், Thigazhum - விளங்குகின்ற
அருக்கன், Arukkan - ஸூர்யன்போன்று
அணி, Ani - உஜ்வலமான
நிறமும், Niramum - ப்ரகாசத்தையும்
கண்டேன், Kandeen - ஸேவிக்கப்பெற்றேன்
செரு, Seru - யுத்த பூமியிலே
கிளரும், Kilarum - பராக்ரமங்காட்டுகின்ற
பொன் ஆழி, Pon Aazhi - அழகிய திருவாழியையும்
கை, Kai - திருக்கையில்
கண்டேன், Kandeen - ஸேவிக்கப்பெற்றேன்
புரி சங்கம், Puri Sangam - வலம்புரிச்சங்கையும் (மற்றொரு திருக்கையிலே)
கண்டேன், Kandeen - ஸேவிக்கப்பெற்றேன்.