திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2283 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2283மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ———— அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போய்த்து என்கிறார் – கைங்கர்யமே யாத்ரையாம் படி யாயிற்று – அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போயிற்று என்கிறார் – 2
இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன், பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், – அன்று திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை மருக்கண்டு கொண்டேன் மனம்.
பதவுரை Show / Hide
பொன் தோய், Pon Thoy - பொன்மயமான பூஷணங்கள் சேரப்பெற்றதும்
வரை, Varai - மலைபோன்றது மான
மார்பில், Marbil - திருமார்பில் (சாத்தப்பட்டிருந்த)
பூத்துழாய், Poothuzhai - திருத்துழாயை
அன்று, Andru - கடல்கடைந்த வக்காலத்தில்
திரு, Thiru - பெரியபிராட்டியார்
கண்டு கொண்ட, Kandu Konda - அநுபவிக்கும்படியாக பெற்ற
திருமாலை, Thirumalai - லக்ஷமீநாதனே!
என் மனம், En Manam - அடியேனுடைய மனமானது
உன்னை, Unnai - உன்னிடத்தே
மருக்கண்டு கொண்டு, Marukkandu Konda - பொருத்தப்பெற்றதனால்
இன்றே, Indre - இன்று
கழல், Kazhal - உனது திருவடிகளை
கண்டேன், Kandeen - கண்டு அநுபவிக்கப் பெற்றேன்,
ஏழ்பிறப்பும், Ezhipirappum - ஜந்மப்ரம்பரைகளையெல்லாம்
அறுத்தேன், Arutthen - (இனிமேல் தொடராதபடி) ஒழித்திட்டேன்