திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2284 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2284மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழ் இவருடைய மனஸ்ஸூ அங்கே மறுவின படி சொல்லிற்று அவன் இவருடைய மனசை அல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் கீழ் இவருடைய மனஸ் ஸூ அங்கே மருவினபடி சொல்லிற்று – அவன் இவருடைய மனசை யல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் – இப்படி தன்னுடைய மனஸ்ஸூ அவன் பக்கலிலே மருவிக் கண்டவாறே அவனும் தம்முடைய மனசிலே அபி நிவிஷுடனாய்க் கலந்த படியை அருளிச் செய்கிறார் – 3
மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள் தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், – சினத்துச் செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன், வருநரகம் தீர்க்கும் மருந்து.
பதவுரை Show / Hide
மாகடல் நீர் உள்ளான், Makadal Neer Ullan - பெரிய திருப்பாற்கடல் நீரிலே திருக்கண் வளர்ந்தருள்பவனும்
மலராள் தனத்து உள்ளான், Malaral Thanathu Ullan - பிராட்டியின் திருமுலைத்தடத்திலே அடங்கிக் கிடப்பவனும்
தண் துழாய் மார்பன், Than Thuzhai Marban - குளிர்ந்த திருத்துழாயைத் திருமார்பிலணிந்தவனும்,
செருநர், Serunar - சத்துருக்கனானவர்கள்
உக, Uga - அழியும்படி
சினத்து, Sinatthu - சீற்றத்தினாலே
செற்று, Settru - த்வம்ஸம்பண்ணி
உகந்த, Ugandha - மகிழ்ந்தவனும்
தேங்கு ஓதம் வண்ணம், Thengu Otham Vannam - தேங்கின கடல் போன்ற வடிவையுடையவனும்
வரு நாகம் தீர்க்கும் மருந்து, Varu Naagam Theerkum Marundhu - தப்பாமல் நேரக்கூடிய ஸம்ஸாரமாகிற நாகத்தைப் போக்கவல்ல மருந்து போன்றவனுமான ஸர்வேச்வான்
மனத்து உள்ளான், Manaththu Ullaan - என்மனத்திலே வந்து சேர்ந்துவிட்டான்