திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2285 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2285மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – சர்வ ரஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகங்கள் என்கிறார் – கீழ் –தமக்குச் செய்த படி சொன்னார் – இதில் பொதுவான ரஷையைச் சொல்லுகிறது –அது ஸ்வஜன ரஷணம் – சர்வ ரக்ஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்கிறார் – 4
மருந்தும் பொருளும் அமுதமும் தானே, திருந்திய செங்கண்மா லாங்கே, – பொருந்தியும் நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால், அன்றுலகம் தாயோன் அடி.
பதவுரை Show / Hide
திருந்திய, Thirundhiya - இவனே பரமபுருஷனென்று தெளிவாகக் கண்டு கொள்வதற்குக் காரணமான
செம் கண், Sem Kan - செந்தாமரை போன்ற திருகண்களையுடைய
மால், Maal - ஸர்வேச்வரனாயும்
ஆங்கே, Aange - உலகத்தைக் காத்தருள்வதாகிய அக்காரியமொன்றிலேயே
நின்று பொருந்திய, Ninru Porundhiya - நிலைநின்று பொருந்தினவனாயும்
உலகம், Ulagam - உலகங்களை
உண்டு, Undu - பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்துக் காத்தவனாயும்
அன்று, Andru - முன்பொரு காலத்தில்
நீர் ஏற்று, Neer Aetru - (மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்று
மூ அடியால் உலகம் தாயோன், Moo Adiyaal Ulagam Thaayon - மூவடியாலே உலகங்களை யெல்லாம் தாவியளந்தவனாயுமுள்ள எம்பெருமானுடைய
அடி தானே, Adi Thane - திருவடிகளே
மருந்தும், Marundhum - மருந்துபோலே ஸம்ஸாரவியாதியைத் தொலைப்பனவாயும்
பொருளும், Porulum - பணம்போலே வேண்டியவற்றைப் பெறுவிப்பனவாயும்
அமுதமும், Amudhamum - அமிருதம்போலே போக்யமாயுமிருக்கின்றன.