Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2286 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2286மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்துத்தமானவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் – அவனே மருந்தும் -பொருளும் -அமுதமுமானவாறே இனி அழகை அனுபவிப்போம் என்கை- அப்ராக்ருதமான அழகுக்கு வஸ்துக்களை சத்ருசமாக சொல்லுகிறது –அலமாப்பாலே இறே- அழகை அனுசந்தித்தாருக்குப் பேசாது இருக்க ஒண்ணாது பேச ஒண்ணாது – திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்த்துதம் ஆனவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் – 5
அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,
படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், – முடிவண்ணம்
ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே
ஆராழி கொண்டாற் கழகு.
அன்று உலகம் தாயோன், Andru Ulagam Thaayon - முன்பு உலகங்களைத் தாலியளந்த பெருமானுடைய
அடி வண்ணம், Adi Vannam - திருவடிகளின் நிறம்
தாமரை, Thamarai - தாமரைப்போலே சிவந்திராநின்றது
படி வண்ணம், Padi Vannam - திருமேனியின் நிறம்
பார் கடல் நீர் வண்ணம், Paar Kadal Neer Vannam - பூமயைச் சூழ்ந்த கடல் நீரின் வண்ணம் போல் கறுதுதுக் குளிர்திராநின்றது.
முடி வண்ணம், Mudi Vannam - கிரீடத்தினுடைய நிறம்
ஓர் ஆழி வெய்யோன், Oru Aazhi Veyyon - ஒற்றைச்சக்கர முடைய தேரிலேறின ஸூர்யனுடைய நிறம் போன்றது,
ஒளியும், Oliyum - (அப்பெருமானுடைய) தேஜஸ்ஸும்
அஃது அன்றே, Azhthu Andrae - அந்த ஸூர்யப்ரகாசம் போன்றதே யன்றோ
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு, Aar Aazhi Kondaarku Azhagu - அழகு பொருந்திய திருவாழியைக் கையில் கொண்டுள்ள பெருமானுடைய அழகு இப்படிப்பட்டதாயிராநின்றது.