திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2287 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2287மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் – கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் 6
அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம், அழகன்றே யண்டம் கடத்தல், – அழகன்றே அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ, கங்கைநீர் கான்ற கழல்.
பதவுரை Show / Hide
ஆழியாற்கு, Aazhiyaarku - திருவாழியையுடைய ஸர்வேச்வரனுக்கு
ஆழி நீர் வண்ணம், Aazhi Neer Vannam - கடல் நீரின் நிறம் போன்ற நிறமானது
அழகு அன்றே, Azhagu Andrae - மிகவுமழகிய நிறமன்றோ,
அண்டம் கடத்தல், Andam Kadaththal - மேலுலகங்களை அளந்து கொண்டது
அழகு அன்றே, Azhagu Andrae - அழகன்றோ
அங்கை, Angai - உள்ளங்கையிலே
நீர் ஏற்றாற்கு, Neer Aetrarku - மாவலி தானம் பண்ணின நீரைப் பெற்றுக் கொண்ட பெருமானுக்கு
அலர் மேலான், Alar Melan - பிரமன்
கால் கழுவ, Kaal Kazhuva - திருவடிகளை விளக்க, (அப்போது)
கங்கை நீர், Gangai Neer - கங்காதீர்த்தத்தை
கான்ற, Kaandru - வெளிப்படுத்திய
கழல், Kazhal - அத்திருவடி
அழகு அன்றே, Azhagu Andrae - அழகன்றோ