| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2288 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அழகு இப்படி குறைவற்ற பின்பு நாமும் இப்படி அனுபவிப்போம் என்று திரு உள்ளத்தை அழைக்கிறார் – இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து அவன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து வாளும் படி வாராய் என்கிறார் – 7 | கழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை, பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், – எழிலளந்தங் கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை, நண்ணற் கரியானை நாம். | நெஞ்சே, Nenchae - ஓ மனமே! கார் கடல் நீர், Kaar Kadal Neer - கறுத்த கடலின் நீரோட கூடின வேலை, Vela - கரையையுடைத்தான பொழில், Pozhil - பூமியை அளந்த, Alandha - அளந்து கொண்டவனும் புள் ஊர்தி, Pul Oorthi - கருடனை வாஹநமாக வுடையவனும் செல்வன், Selvan - ஐச்வரிய முடையவனும் எழில் அளந்து எண்ணற்கு அரியானை, Ezhil Alandhu Ennaarku Ariyanai - அழகை எல்லைகண்டு நினைப்பதற்கும் முடியாதவனும் எப்பொருட்கும் சேயானை, Epporutkum Seyaanai - எல்லா வஸ்துக்களுக்கும் நெடுந்தூரத்திலிருப்பவனும் நண்ணற்கு அரியானை, Nannarku Ariyaanai - (யார்க்கும் தம் முயற்சியாலே) கிட்ட முடியாதவனாயிருப்பவனுமான எம்பெருமானுடைய கழல், Kazhal - திருவடிகளை நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் வணங்குவோம், வா, Vaa - நீயும் உடன் படுவாயாக. |