Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2289 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2289மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – எல்லா இந்த்ரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் – எல்லா இந்திரியங்களும் அவனை அனுசந்திக்க வேணும் என்கிறார் – எல்லா இந்திரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் – 8
நாமம் பலசொல்லி நாராய ணாவென்று,
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. – வா,மருவி
மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்,
கண்ணனையே காண்கநங் கண்.
நல் நெஞ்சே, Nal Nenjee - நல்ல மனமே!
நாராயணா என்று பல நாமம் சொல்லி, Naarayana Enru Pala Naamam Solli - நாராயணன் முதலாகவுள்ள பல திருநாமங்களைச் சொல்லி
அம் கையால், Am Kaiyhaal - அழகியகையினாலே
நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் தொழுவோம்
மருவி வா, Maruvi Vaa - இதற்கு நீயும் உடன்பட்டுவர
மண் உலகம், Man Ulagam - பூமி முதலிய லோகங்களை
உண்டு உமிழ்ந்த, Undu Umizhndha - ஒருகால் உள்ளே அடக்கிவைத்துப் பிறகு வெளிப்படுத்தினவனும்
வண்டு அளையும் தண் துழாய், Vandu Alaiyum Than Thuzhai - வண்டுகள் படித்து ஒலிசெய்யபெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையவனுமான
கண்ணனையே, Kannaniye - கண்ணபிரானையே
நம் கண், Nam Kan - நமது கண்கள்
காண்க, Kaanng - கண்டு களித்திடுக