Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 229 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
229ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 7
மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ் வாயர் தம் பாடி
சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து உன்னைச் சுற்றும் தொழ நின்ற சோதி
பொருட்டா யமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்ற குற்றமல்லால் மற்றிங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-7
மருட்டு ஆர்,Maruttu Aar - (கேட்டவர்களை) மயங்கப் பண்ணுந்திறமை யுள்ள
மெல்,Mel - மெல்லிய (த்வநியை யுடைய)
குழல் கொண்டு,Kuzhal Kondu - வேய்ங்குழலைக் கையிற் கொண்டு
பொழில்,Pozhil - (ஸம்போகத்துக்கு ஏகாந்தமான) சோலைகளிலே
புக்கு,Pukku - போய்ச் சேர்ந்து
வாய் வைத்து,Vaai Vaiththu - (அந்த வேங்குழலை) (தன்) வாயில் வைத்து (ஊத)
ஆயர் தம் பாடி,Aayar Tham Paadi - (அவ்வளவிலே) இடைச்சேரியிலுள்ள
சுருள் தார் மெல் குழல்,Surul Thaar Mel Kuzhal - சுருண்டு பூவனிந்த மெல்லிய குழலையுடைய
அக் கன்னியர்,Ak Kanniyar - (இடையர்களால் காக்கப்பட்டிருந்த) அந்த இடைப்பெண்கள்
வந்து,Vandhu - (குழலோசை கேட்கையிலுள்ள விருப்பத்தாலே காவலுக்கடங்காமல்) (அச் சோலை யிடத்தே) வந்து
உன்னை,Unnai - உன்னை
சுற்றும் தொழ,Sutrum Thozha - நாற்புரமும் சூழ்ந்து கொண்டு ஸேவிக்க
நின்ற,Nindra - (அதனால்) நிலைத்து நின்ற
சோதி,Sothi - தேஜஸ்ஸை யுடையவனே
எம் பெருமான்,Em Perumaan - எமக்குப் பெரியோனே!
உன்னை,Unnai - (இப்படி தீம்பனான) உன்னை
பெற்ற,Pettra - பிள்ளையாகப் பெற்ற
குற்றம் அல்லால்,Kutram Allaal - குற்றமொன்றை (நான் ஸம்பாதித்துக் கொண்டேனத்தனை) யல்லது
இங்கு,Ingu - இவ்வூரில் உள்ளாரோடொக்க
மற்று பொருள் தாயம் இலேன்,Matru Porul Thaayam Ileyn - மற்றொரு பொருட் பங்கையும் பெற்றிலேன்;
அரட்டா,Arattaa - (இப்படிப்பட்ட) தீம்பனே!
உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன்