Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2291 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2291மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது –யோக்யராய்ப் பேச வேணுமே – ஆனால் சிறிது நன்மை தேடிக் கொண்டு வந்து புகுர வேண்டாவோ என்ன நீங்கள் மேல் விழுந்து அனுபவிக்க -எல்லா நன்மையையும் தன்னடையே உண்டாம் என்கிறார் அங்குள்ள நன்மையே பேசிப் போம் இத்தனையோ-நமக்கும் சில பேறு உண்டாவோ -என்ன நாம் அவனுடைய திருநாமம் சொல்லி உபக்ரமிக்க எல்லா சம்பத்துக்களும் தங்கள் ஸ்வரூபம் பெருகைக்குத் தாமே வந்தடையும் என்கிறார் – அங்குள்ள அழகைப் பேசிப் போம் அத்தனையோ-நமக்கும் சில பேறுகள் வேண்டாவோ -என்னில் – நாம் அவனுடைய திரு நாமங்களைச் சொல்ல உபக்ரமிக்க -எல்லா சம்பத்துக்களும் தங்களுடைய ஸ்வரூபம் பெறுகைக்காகத் தானே வந்து அடையும் என்கிறது – இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது அதுக்கு ஈடான நன்மைகள் வேண்டாவோ -என்ன மேல் விழுந்து அனுபவிக்கவே எல்லா நன்மைகளும் தன்னடையே உண்டாம் -என்கிறார் – 10
தேசும் திறலும் திருவும் உருவமும்,
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் – பேசில்
வலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத,
நலம்புரிந்து சென்றடையும் நன்கு.
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான், Valam Purindha Vaan Sangam Kondaaan - வலது பக்கத்தில் சுழித்திருக்கிற சிறந்த சங்கை ஏந்தியுள்ள பெருமானுடைய
பேர் ஓத, Per Oodha - திருநாமங்களை அப்யஸிக்க வேணுமென்று
பேசில், Pesil - சொன்னமாத்திரத்தில்
தேசும், Desum - தேஜஸ்ஸும்
திறலும், Thiralum - பராக்ரமமும்
திருவும், Thiruvum - செல்வமும்
உருவமும், Uruvamum - அழகிய ரூபமும்
மாசு இல் குடி பிறப்பும், Maasu Il Kudi Pirappum - குற்றமற்ற நற்குலமும்
மற்றவையும், Matravaiyum - மற்றுமுள்ள நன்மைகளும்
நலம் புரிந்து நன்குசென்று அடையும், Nalam Purinthu Nankusendru Adayum - தாமே ஆசைப்பட்டு நன்றாக வந்து சேரும்.