Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2292 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2292மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கூரிதான அறிவை உடையார்க்கு அல்லது போக்கி அவனை அறிந்ததாய்த்தலைக் கட்ட ஒண்ணாது கிடீர் -என்கிறார் அவன் திருநாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை –அல்லாதார்க்கு துர்ஜ்ஞேயன் –என்கிறார் – அவன் திரு நாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை -அல்லாதார்க்கு துர்ஜ்ஜேயன்-என்கிறது – கூரியதான ஞானத்தை யுடையார்க்கு அல்லது அவனை அறிந்து தலைக் கட்டப் போகாது -என்கிறார் – 11
நன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும்
பொங்கோ தருவிப் புனல்வண்ணன், – சங்கோதப்
பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப்பார்
நூற்கடலான் நுண்ணறிவி னான்.
நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான், Nangku Oodhum Naal Vedathu Ullaan - நன்றாக ஓதப்படுகிற நான்கு வேதங்களாலும் பிரதி பாதிக்கப்படுபவனும்
நறவு இரியும், Naravu Irikum - தேன் தோற்கும்படியான போக்யதையை யுடையதாய்
பொங்கு ஓதம் அருவி புனல், Pongu Oodham Aruvi Punal - கடல் போலவும் அருவிநீர் போலவுமுள்ளதான
வண்ணன், Vannaan - திருமேனியை யுடையவனும்
சங்கு ஓதம் பால் கடலான், Sangu Oodham Paal Kadalaan - சங்குகளோடே கூடின அலைகளை யுடைத்தான திருப்பாற்கடலில் கண்வளர்த்தருள்பவனும்
பாம்பு அணையின் மேலான், Paambu Anaithin Melan - சேஷ சயனத்தின் மேல் துயில்பவனும்
பயின்று உரைப்பார் நூல் கடலான், Payinru Uraippaar Nool Kadalaan - ஓதியுணர்த்துகின்ற வைதிகர்களின் கடல்போன்ற சாஸ்த்ரங்களால் பிரதபாதிக்கப்படுபவனுமான எம்பெருமான்
நுண் அறிவினான், Nun Arivinaan - (தம் முயற்சியாலே அறிவார்க்கு) அறிய முடியாதவன்.