திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2293 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2293மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆகில் இவனை ஒருவராலும் அறிந்து கண்டதாய் விட ஒண்ணாதோ என்னில் நான் சொல்லுகிற வழியாலே காண்பாருக்குக் காணலாம் -என்கிறார் – இப் பாட்டிலும் அறிய வரிது என்னுமத்தை உபபாதிக்கிறார் – ஒருத்தருக்கும் அறியப் போகாதோ என்னில் -இப்படி அறிவிற்கு அறியலாம் என்கிறது – ஆகில் அவனை ஒருவராகிலும் அறிந்து கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாதோ என்னில் நாம் சொல்லுகிற இவ் வழியாலே காண்பார்க்குக் காணலாம் -என்கிறார் – 12
அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில், செறிவென்னும் திண்கதவம் செம்மி, – மறையென்றும் நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும் பைங்கோத வண்ணன் படி.
பதவுரை Show / Hide
மறை, Marai - வேதத்தை
என்றும், Endrum - இடைவிடாது
நன்கு ஓதி, Nangu Othi - நன்றாக அத்யயநம் பண்ணி
அறிவு என்னும், Arivu Ennum - ஜ்ஞாநமாகிற
தாள் கொளுவி, Thaal Koluvi - தாழ்ப்பாளையிட்டு
ஐம்புலனும், Aimpulanum - பஞ்சேந்திரயங்களையும்
தம்மில் செறிவு என்னும், Thammil Serivu Ennum - (வெளிச்சொல்லாமல்) உள்ளே அடக்கிவைப்பதாகிற.
திண் கதவம் செம்மி, Thin Kathavam Semmi - திடமான கதவையடைத்து
நன்கு உணர்வார், Nangu Unarvaar - நன்றாக தியானிக்குமவர்கள்
பைங்கோதம் வண்ணன்படி, Paingotham Vannampadi - அழகிய கடலின் நிறம்போன்ற நிறமுடையனான எம்பெருமானது தன்மைகளை
நாள்தோறும், Naalthorum - தினந்தோறும்
காண்பர், Kaanbar - ஸாக்ஷித்தகரிப்பான்