Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2294 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2294மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழ் இரண்டு பாட்டாலும் அருமை சொல்லிற்று – இதில்-அவன் தானே வந்து அவதரித்துத் தன்னைக் காட்டில் காணும் அத்தனை என்கிறார் – அன்றிக்கே இப்படி அரியனாய் இருந்து உள்ளவனுடைய சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை அருளிச் செய்கிறார் – இப்படி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு வருத்தம் உண்டு இத்தனை போக்கி அவன் தானே கொண்டு வந்து காட்டும் அன்று வருத்தம் அறக் காணலாம் -என்கிறார்- 13
படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,
அடிவட்டத் தாலளப்ப நீண்ட – முடிவட்டம்,
ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,
மாகாய மாய்நின்ற மாற்கு.
பண்டு, Pandhu - முன்னொரு காலத்தில்,
உலகம் நீர் ஏற்று, Ulagam Neer Aetru - பூமி தானம் வாங்கிக்கொண்டு
தாமரை படிவட்டம், Thamarai Padivattam - தாமரை மலர்ந்தாற் போலே வட்ட வடிவமாயிருக்கிற பூமியை
அடி வட்டத்தால் அளப்ப, Adi Vattathaal Alappa - திருவடியினால் அளப்பதற்காக
மா காயம் ஆய் நின்றமாற்கு, Maa Kaayam Aay Nindramarku - பெரிய திருமேனியாய் (த்ரிவிக்ரமனாய்) வளர்ந்து நின்ற எம்பெருமானுடைய,
நீண்ட முடி வட்டம், Neenda Mudi Vattam - நீண்ட திருவபிஷேகமானது
ஆகாயம் ஊடு அறுத்து, Aakaayam Oodu Aruththu - மேலுலகங்களின் வழியாகச் சென்று
அண்டம் போய் நீண்டதே, Andam Poi Neendadhe - அண்ட கடாஹத்தளவாக வளர்ந்த்தே! இஃது என்ன ஆச்சரியம்!