| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2295 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அறிவென்னும் தாள் கொளுவி -என்கிற பாட்டில் படியே இந்த்ரிய ஜெயம் பண்ணுகை அரிதாய் இருந்ததீ- பிரத்யஷத்தால் அல்லது இந்த்ரிய ஜெயம் பண்ண ஒண்ணாது ஆனால்-எங்களுக்கும் இவனைக் கண்டு அனுபவிக்கலாமாவதொரு வழி இல்லையோ என்னில் அசக்தர் ஆனாருக்கும் இழக்க வேண்டாத உபாயம் சொல்லுகிறது – அவ்வருமையால் வரும் குறை தீர ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் அவன் திருவடிகளை யாஸ்ரயித்து எளிதாகக் காணலாம் -என்கிறார் மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே -திருக் குறும் தாண்டகம் -19- மெய்ம்மையே காண்கிற்பார் -திருக் குறும் தாண்டகம் -18-என்னக் கடவது இறே ஸ்ரீ எம்பெருமானை அகற்றுகைக்கு விஷயங்கள் உண்டாய்த்து விஷயங்களை அகற்றுகைக்கு ஸ்ரீ உகந்து அருளின நிலங்கள் உண்டாய்த்து – அறிவு என்னும் தாள் கொளுவி-என்கிற பாட்டில் சொல்லுகிற படியே இந்திரிய ஜெயம் பண்ணி அறிகை அரிதாய் இருந்ததீ அசக்தர் இழக்கும் அத்தனையோ என்னில் -இழக்க வேண்டாத உபாயம் சொல்கிறது – கீழே ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி -என்று -இந்திரிய ஜெயம் பண்ணுகை -அரிது இந்திரிய ஜெயம் பண்ணினார்க்கு அல்லது அவனைக் காண முடியாது -கண்டால் அல்லது இந்திரியங்களை ஜெயிக்க முடியாது ஆன பின்பு அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஸ்ரீ திருமலையிலே வந்து ஸூலபன் ஆனான் -ஆனபின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம் -என்கிறார் – 14 | மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு, நூற்பால் மனம்வைக்க நொய்விதாம்,- நாற்பால வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும், பாதத்தான் பாதம் பணிந்து. | நாற்பால வேதத்தான், Naarpaala Vedaththaan - நான்கு வகைப்பட்ட வேதங்களாலே பிரதி பாதிக்கப்படுபவனும் வேங்கடத் தான், Venkatat Than - திருமலையிலே நிற்கும் ஸௌலப்யமுடையவனும் விண்ணோர் முடி தோயும் பாதத்தான், Vinnor Mudi Thoyum Paadaththaan - நிதயஸூரிகளின் கிரீடம் உறையும் படியான திருவடிகளையுடையவனுமான எம்பெருமானுடைய பாதம், Patham - திருவடிகளை பணிந்து, Panindhu - ஆச்ரயித்து மால் பால், Maal Paal - அந்த ஸர்வேச்வரனிடத்திலே மனம் சுழிப்ப, Manam Suzhippa - நெஞ்சு பொருந்த (அதனாலே) மங்கையர் தோள் கைவிட்டு, Mangaiyar Thol Kaivittu - ஸ்த்ரீகளின் தோளோடே அணையவேணு மென்கிற காமத்தைக் கைவிட்டு நூல் பால், Nool Paal - (வேதம் முதலிய) சாஸ்திரங்களிலே மனம் வைக்க, Manam Vaikka - மனம் செலுத்துவதற்கு நொய்விது ஆம், Noyvidhu Aam - எளிதாகும். |