திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2296 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2296மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பெரியனான ஸ்ரீ சர்வேஸ்வரனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளர்ந்து அருளக் கண்டேன் இத்தனை என்கிறார் அவன் தன்னாலே ஸ்வயம் வரிக்கப் பட்ட எனக்கு இத் துக்கம் ஒன்றும் இல்லை இறே என்கிறது – இவருக்கு அவன் தானே யோகாப்யாசம் பண்ணி வந்தபடி- அவனாலே ஸ்வயம் பட்டவனுக்கு துக்கம் ஒன்றும் இல்லை இறே -என்கிறது – இப்படி அரியனானவனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன- நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளரக் கண்டேன் என்கிறார் 15
பணிந்துயர்ந்த பெளவப் படுதிரைகள் மோத, பணிந்த பணிமணிக ளாலே – அணிந்து,அங் கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன் மனந்த னணைக்கிடக்கும் வந்து.
பதவுரை Show / Hide
பணிந்து உயர்ந்த, Panindhu Uyarndha - தாழ்ந்தும் எறியும் வீசுகின்றவையான
பௌவம் படுதிரைகள், Pauvam Paduthiraigal - கடலிலுண்டான அலைகளானவை
மோத, Modha - நாலு பக்கமும் அடிக்க,
பணிந்த, Panindha - (அத்திவலைகள் திருமேனியில் படாதபடி குடை பிடித்தாற்போலே) கவிந்திருக்கிற
பணம், Panam - படங்களிலுண்டான
மணிகளாலே, Manigalale - மாணிக்கங்களினாலே
அணிந்த, Anindha - அலங்கரிக்கப்பட்டிருக்கிற
அனந்தன், Ananthan - திருவனந்தாழ்வானாகிற
அணை, Anai - திருப்பள்ளி மெத்தையிலே
கிடக்கும், Kidakkum - திருக்கண் வளர்ந்தருளாகிற
அம்மான், Ammaan - ஸர்வேச்வரன் (அந்தப் படுக்கையிற் பொருந்தாதே)
அங்கு, Angu - அங்கு நின்றும்
அடியோன்தன், Adiyonthan - அடியேனுடைய
மனம் அணை, Manam Anai - மனமாகிற படுக்கையில்
கிடக்கும், Kidakkum - சயனித்திரா நின்றான்