திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2297 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2297மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ திருப்பாற் கடலிலே நின்றும் தம் திரு வுள்ளத்துக்கு வருகிற போது நடுவு வழி வந்த படியை அருளிச் செய்கிறார் – மனந்தன் அணைக் கிடக்கும் -என்றாரே-இப்படி வந்து கிடைக்கைக்கு அடி ஸ்ரீ பிராட்டியோட்டை சம்பந்தம் என்கிறார் – இப்படி வந்து தங்குகைக்கு அடி ஸ்ரீ பிராட்டியோடே இருக்கை என்கிறார் – ஸ்ரீ திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது ஸ்ரீ திருவல்லிக் கேணியிலே வந்து தங்கினான் -என்கிறார் – 16
வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம் அந்தி விளக்கும் அணிவிளக் காம், – எந்தை ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன், திருவல்லிக் கேணியான் சென்று.
பதவுரை Show / Hide
ஒரு அல்லி தாமரையாள், Oru Alli Thamaraiyal - அழகிய இதழ்களையுடைய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பிராட்டி
சென்று ஒன்றிய சீர் மார்பன், Senru Onriya Seer Marban - வந்து பொருந்திய அழகிய திருமார்பை யுடையவனும்
வந்து உதைத்த வெண்திரைகள் செம் பவளம் வெண் முத்தம், Vandu Uthaitha Venthiraihal Sem Pavalam Ven Muththam - வந்து வீசுகின்ற வெளுத்த அலைகளிலுண்டான சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும்
அந்த விளக்கும் அணி விளக்குஆம், Andha Vilakkum Ani Vilakkuam - ஸ்ந்தியாகாலத்தை விளக்குகின்ற மங்களதீபங்களாக ஆகப்பெற்ற
திருவல்லிக்கேணியான், Thiruvallikeniyaan - திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருப்பவனுமான பெருமான்
எந்தை, Endhai - எனக்கு ஸ்வாமி