| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2298 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரன் நம் பக்கல் வ்யாமுக்தன் என்று அறிவதொரு நாள் உண்டானால் அதுக்கு முன்பு உள்ள காலத்தோடு மேல் வரக் கடவ காலத்தோடு வாசி அற எல்லாம் ஸ பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் – அவளோடு கூடி இருக்கையாலே பலத்துக்குத் தட்டு இல்லை -இனி என்னுடைய வாக்கானது அவனை விச்சேதம் இன்றிக்கே அனுபவிப்பதாக – இப்படிப்பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரனை நம் பக்கல் வியாமுக்தன் என்று அறிவதொரு நாள் யுண்டானால் இதுக்கு முன்பும் பின்பும் உள்ள காலம் எல்லாம் ச பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் – 17 | சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால், என்றநா ளெந்நாளும் நாளாகும், – என்றும் இறவாத எந்தை இணையடிக்கே யாளாய், மறவாது வாழ்த்துகவென் வாய். | என்றும் இறவாத எந்தை, Endrum Iravadha Endhai - ஒருநாளுமழவில்லாதவனான எம்பெருமானுடைய இணை அடிக்கே, Inai Adikke - உபயபாதங்களுக்கே ஆள் அய், Aal Ayi - ஆட்பட்டு மறவாது, Maravaadhu - மறவாமல் என்வாய் வாழ்த்துக, Envaai Vazhththuga - என்வாய் வாழ்த்த வேணும், (இங்ஙனேயாகில்) சென்ற நாள், Senru Naal - கீழ்க்கழிந்த காலங்களும் செல்லாத, Selladha - இனிமேல் வரப்போகிற நாள்களும் செங்கண் மால், எங்கள் மால் என்ற நாள், Sengkan Maal Engal Maal Endra Naal - ‘புண்டரீகாக்ஷன் நம்மிடத்து வியாமோஹ முடையனாயிருக்கிறான்‘ என்று சொல்லப்பெற்ற நிகழ்காலமுமாகிய எந்நாளும், Ennaalum - எல்லாக்காலங்களும் நாள் ஆகும், Naal Aakum - நல்லகாலமேயாகும். |