Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2299 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2299மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கால த்ரயத்திலும் இழவு வாராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு உன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே யாத்ரையாய் இதுக்கு விரோதமான சம்சார அனுசந்தானத்தாலே வரும் பயம் வாராதபடி பண்ணி யருள வேணும் -என்கிறார் – உன் உடைமை யொன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் –என்கிறார் – மறவாது என்றும் நான் நினைத்தால் லாபம் உண்டோ –நீ அஞ்சாது இருக்க அருள் என்கிறார் – உன்னுடைமையை ஒன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் என்கிறார் – கால த்ரயத்திலும் அழிவு வராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தையும் தந்து தத் விரோதியான சம்சார பயத்தையும் மாற்றி அருள வேணும் என்கிறார் – 18
வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே, – தாவியநின் எஞ்சா
இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,
அஞ்சா திருக்க அருள்.
வாமனன் ஆய், Vaamanan Aayi - வாமநரூபியாகி
மாவலி பால், Mavali Paal - மஹாபலியினிடத்தில் (சென்று)
வா மொழிந்து, Vaa Mozhinthu - (மதுரமான சில) வாய்மொழிகளைச் சொல்லி
மூ அடி மண், Moo Adi Mann - மூவடிநிலத்தை (இரந்து பெற்று)
அளந்து கொண்ட, Alanthu Konda - அதை அளந்து கொண்ட
நெடு மாலே, Nedu Maale - ஸர்வேச்வரனே!
எஞசா, Enjasa - கருங்குதலின்றி
தாலிய, Thaliya - ஸர்வவ்யாபியான
நின் இணை அடிக்கே, Nin Inai Adikke - உனது உபய பாதங்களுக்கே
ஏழ் பிறப்பும், Ezha Pirappum - எல்லா பிறவிகளிலும்
ஆள் ஆகி, Aal Aagi - நான் ஆட்பட்டவனாகி
அஞ்சாது இருக்க, Anjaadhu Irukka - பயங்கெட்டிருக்கும் படி
நீ அருள், Nee Arul - நீ கிருபைபண்ணவேணும்.