| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2300 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அஞ்சாது இருக்க அருள் என்றார் அநந்தரம்-திரு உள்ளமானது நாம் அவனை இப்படி அருள் என்று நிர்பந்தித்தால் அவன் முன் நின்று அருளுகைக்கு வேண்டும் யோக்யதை நம் பக்கலிலே உண்டாயோ – அன்றிக்கே – அவன் தான் செய்ய வல்லானோ -என்று நெஞ்சு பிற்காலிக்க-அவை ஒன்றும் இல்லை காண்- யோக்யராய் இருப்பாருக்கு முன்னே அயோக்யரான நமக்குத் தன் அகடிதகட நா சாமர்த்யத்தாலே அருளும் நீ பயப்பட வேண்டா என்கிறார் – அருள் என்னும் காட்டில் அருளுமோ என்று திரு உள்ளம் விசாரிக்க -நமக்கு அருளாது ஒழியுமோ -என்கிறார் – அஞ்சாது இருக்க அருள் என்று நாம் அவனை நிர்ப்பந்தித்தால் -அவன் நம்முடைய அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷித்தல் அன்றிக்கே நம் கார்யம் செய்கைக்கு சக்தன் இன்றிக்கே இருத்தல் செய்யிலோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க அவன் நம் கார்யம் செய்கைக்கு சக்தனே -நம் அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷிப்பதும் செய்யான் -என்கிறார் – 19 | அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது, முந்தையராய் நிற்பார்க்கு முன். | இருளாத சிந்தையர் ஆய், Irulaadha Sindhaiyar Aayi - அஜ்ஞானவிருள் சேராத நெஞ்சையுடையாய்க் கொண்டு சே அடிக்கே, Sae Adikke - திருவடிகளுக்கு செம் மலர் தூய், Sem Malar Thoo - நல்ல புஷ்பங்களை ஸமர்ப்பித்து கை தொழுது, Kai Thozhudhu - அஞ்ஜலிபண்ணி முந்தையர் ஆய் நிற்பார்க்கு, Mundhaiyar Aayi Nirpaarkku - ‘நான் முன்னே நான் முன்னே‘ என்று நிற்கும் பக்தர்களுக்கு, முன் அன்று, Mun Andru - முன்பொருகாலத்தில் தெருளாத பிள்ளை ஆய், Therulaadha Pillai Aayi - அறியாத சிறு குழந்தையாய் ஆல் இலைமேல் சேர்ந்தான், Aal Ilaimeel Serndhaan - ஆலந்தளிரில் சயனித்த பெருமான் அருளாது ஒழியுமே, Arulaadhu Ozhiyume - கிருபைபண்ணாமற்போவனோ? |