திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2301 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2301மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவன் தன்னை அபேஷித்தார்க்குத் தன்னை அழிய மாறாதேயோ கார்யம் செய்வது என்கிறார் – சம்சார பயம் கெட்டார்க்கு யாத்ரை இதுவே இறே – உன் படியை நீயே சொல்ல வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானைக் கேட்கிறார் – அவன் தன்னை அபேக்ஷித்தார்க்கு தன்னை அழிய மாறி கார்யம் செய்யுமவன் என்கிறார் – 20
முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக மீரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே? – என்னே திருமாலே செங்க ணெடியானே, எங்கள் பெருமானே நீயிதனைப் பேசு.
பதவுரை Show / Hide
முன், Mun - முன்பொரு காலத்தில்
உலகம், Ulagam - உலகங்களை யெல்லாம்
உண்டு, Undu - திருவயிற்றிலே வைத்திருந்து
உமிழ்ந்தாய்க்கு, Umizhndhaaykku - பிறகு வெளிப்படுத்தின உனக்கு
அவ்வுலகம், Avvulagam - அந்த வுலகங்களை
பின், Pin - பின்பொருகாலத்தில்
ஈர் அடியால், Eer Adiyaal - இரண்டு திருவடிகளாலே
அளந்து கோடல், Alandhu Koadal - அளந்து கொள்வதானது
பெரிது ஒன்றே, Peridhu Ondre - பெரியவொரு காரியமாகுமோ?
திருமாலே, Thirumaale - திருமகள்நாதனே!
செம் கண் நெடியானே, Sem Kan Nediyanae - சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வாதிகளே!
எங்கள் பெருமானே, Engal Perumane - எமக்கு ஸ்வாமியானவனே!
நீ இதனை பேசு, Nee Idhanai Pesu - நீ இதை (எனக்குத் தெரிய)ச் சொல்லவேணும்,
என்னே, Ennae - இஃது என்னோ?