திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2302 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2302மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவனை ஒருவரால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் – கீழ்த் திரு வுலகு அளந்த அருளின இடம் ப்ரஸ்திதமான வாறே அப்படி வரையாதே பரிமாறும் ஸ்ரீ கிருஷ்ணாவ தாரத்தைச் சொல்லுகிறார் – கீழ் திரு உலகு அளந்து அருளின இடம் ப்ரஸ்த்துதம் ஆகையால் அப்படி வரையாதே பரிமாறும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைச் சொல்லுகிறார் – அவனை ஒருவராலும் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் – 21
பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே வாச மலர்த்துழாய் மாலையான், – தேசுடைய சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்,பொங்கரவ வக்கரனைக் கொன்றான் வடிவு.
பதவுரை Show / Hide
வாசம் மலர் துழாய் மாலையான், Vaasam Malar Thuzhai Maalaiyaan - மணம்மிக்க புஷ்பங்களோடு கூடின திருத்துழாய் மாலையை அணிந்தவனும்
தேச உடைய சக்கரத்தான், Desa Udaiya Chakkaraththaan - தேஜ்ஸ்ஸையுடைய திருவாழியை ஏந்தினவனும்
சங்கினான், Sanginaan - ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடையவனும்
சார்ங்கத்தான், Saarngakthaan - சார்ங்கவில்லையுடையவனும்
பொங்கு அரவம் வக்கரனை கொன்றான், Pongu Aravam Vakkaranai Konraan - மிக்க ஆரவாரமுடையனாய் வந்த தந்தவக்த்ரனைக் கொண்றொழித்தவனுமான எம்பெருமாளுடைய
வடிவு, Vadivu - ஸ்வரூப ஸ்வபாவங்கள் (எப்படிப்பட்டவை யென்னில்)
பேசுவர், Pesuvar - பேசுகின்றார்களோ
அவ்வளவே, Avvalave - அவ்வளவேயாம்.