திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2303 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2303மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றாரே – அநந்தரம் திரு வுள்ளத்தைக் குறித்து நீ முன்னம் அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே ஸ்ரத்தை பண்ணு கிடாய் என்கிறார் – அவன் படி பரிச்சேதிக்கப் போகாத பின்பு அவன் தானே காட்டக் காண் என்கிறார் – ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றவர் தன் திரு உள்ளத்தைக் குறித்து -நீ முன்னம் அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே ஸ்ரத்தை பண்ணு கிடாய் -என்கிறார் – 22
வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும் கடியார் மலர்தூவிக் காணும் – படியானை, செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே, மெய்ம்மையே காண விரும்பு.
பதவுரை Show / Hide
நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே!
வானவர்கள், Vaanavargal - நித்யஸூரிகள்
வடிவு ஆர், Vadivu Aar - அழகு பொருந்திய
முடி, Mudi - கிரீடங்களை
கோட்டி, Kotti - தாழ்த்தி
கடி ஆர் மலர், Kadi Aar Malar - மணம் பொருந்திய புஷ்பங்களை
நாளும், Naalum - நாள்தோறும்
காணும் படியானை, Kaanum Padiyanaai - ஸேவிக்கப்பெற்ற திருமேனியையுடையனான எம்பெருமானை
செம்மையால், Semmaiyaal - முறைப்படியே
உள் உருகி, Ul Urugi - உருக்கங்கொண்டு
செவ்வனே, Sevvane - ருஜுவான வழியாலே
மெய்ம்மெயே, Meimmaiye - உள்ளபடியே
காண, Kaana - ஸேவிப்பதற்கு
விரும்பு, Virumbu - ஆசைப்படு