| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2304 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – மெய்ம்மையைக் காண விரும்பு -என்றாரே –அந்த உபதேசம் கடுகப் பலித்துக் கொடு நின்றதாய் இருந்தது – தான் சொன்னபடியே திருவுள்ளம் விரும்புகிற படி – இவருடைய நெஞ்சாகில் இங்கனே இருக்க வேண்டாவோ உபதேசம் பலித்த படி சொல்கிறது – காண விரும்பு -என்று இவர் சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே -திரு உள்ளம் அவன் திருவடிகளிலே பிச்சேறி விழுகிற படி யைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார் – 23 | விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார் சுரும்பு தொளையில்சென் றூத, அரும்பும் புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே, மனம்துழாய் மாலாய் வரும். | வண்தார், Vanthaar - அழகிய மாலையிலே அம் சிறைய சுரும்பு, Am Siraiya Surumbu - அழகிய சிறகுகளையுடைய வண்டுகள் துளையில் சென்று ஊத, Thulaiyil Senru Oodha - ரஸநாடியிலே படிந்துஊத (அதனால்) அரும்பும், Arumbum - அரும்புகள் உண்டாகப்பெற்ற புனம் துழாய் மாலையான், Punam Thuzhaai Maalaiyaan - நல்ல திருத்துழாய் மாலையை அணிந்தவனான எம்பெருமானுடைய விரும்பி விண்மண் அளந்த பொன் அம்கழற்கே, Virumbi Vinman Alandha Pon Amkazharkke - ஆசைப்பட்டு விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையுமளந்த மிகவழகிய திருவடிகள் விஷயத்திலேயே மனம், Manam - எனது மனமானது துழாய், Thuzhaai - அவகாஹித்து மால் ஆய் வரும், Maal Aay Varum - மயங்கிக் கிடக்கின்றது. |