திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2305 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2305மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அபி நிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று ஏறி மறிந்து இராதே -நெஞ்சே அவனை மேலே விழுந்து ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் – ஆசை பிறந்த பின்பு இனி விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார் என்கிறார் – ஆசை பிறந்த பின்பு விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார்- அபிநிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று இறுமாந்து இராதே- நெஞ்சே -மேல் விழுந்து அவனை ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் – 24
வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும், நெருங்குதீ நீருருவு மானான், – பொருந்தும் சுடராழி யொன்றுடையான் சூழ்கழலே, நாளும் தொடராழி நெஞ்சே தொழுது.
பதவுரை Show / Hide
ஆழி நெஞ்சே, Aazhi Nenjae - கம்பீரமான மனமே!
இரு நிலனும், Iru Nilanum - விசாலமான பூமியும்
மால் விசும்பும், Maal Visumbum - அளவிறந்த ஆகாசமும்
காற்றும், Kaatrum - வாயுவும்
நெருங்கு தீ, Nerungu Thee - செறிந்த தேஜஸ்ஸும்
நீர் உருவும் ஆனான், Niir Uruvum Aanan - ஜலதத்துவமும் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் அந்தர்யாமியானவனும்
பொருந்தும் சுடர் ஆழி ஒன்று உடையான், Porundum Sudar Aazhi Ondru Udaiyaan - பொருந்திய ஒரு சுடர்ச்சக்கரத்தை யுடையவனுமான எம்பெருமானுடைய
சூழ் கழலே, Soozh Kazhale - அடியாரை அகப்படுத்திக்கொள்ளுகிற திருவடிகளையே
வருங்கால் நாளும், Varungaal Naalum - மேலுள்ள காலமெல்லாம்
தொழுது, Thozhudhu - வணங்கி
தொடர், Thodar - (அவனையே) பின்பற்றியிரு.