திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2306 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2306மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் திரு உள்ளமானது திமிர்த்துத் தன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து இருந்தாப் போலே இருந்தது – அத்தைப் பார்த்து நீ இங்கே கிட்டி ஆஸ்ரயித்தால் உனக்கு வருவதொரு குறை இல்லை காண் என்கிறார் – நான் சொல்லுகிறது தப்புண்டோ என்கிறார் – அவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து நிமிர்த்து இருக்கிற திரு உள்ளத்தைக் குறித்து அவனை நீ கிட்டி ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவது ஒரு குறையில்லை காண் என்கிறார் – 25
தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம், முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, – விழுதுண்ட வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும் சேயானை நெஞ்சே சிறந்து.
பதவுரை Show / Hide
தூ நீர் உலகம், Thoo Neer Ulagam - நிர்மலமான நீரையுடைய கடலோடு கூடின உலகங்களை
முழுது, Muzhuthu - முழுவதும்
உண்டு, Undu - திருவயிற்றிலே வைத்தவனாயும்
மொய் குழலாள் ஆய்ச்சி, Moyi Kuzhalal Aaychchi - அழகிய கூந்தலையுடையளான யசோதையினுடைய
விழுது, Vizhudhu - வெண்ணெயை
உண்ட வாயானை, Unda Vaayaanai - அமுதுசெய்த வாயையுடையவனாயும்
மால் விடை ஏழ் செற்றானை, Maal Vidai Ezh Setraanai - கொழுத்த ரிஷபங்களேழையும் முடித்தவனாயும்
வானவர்க்கும் சேயானை, Vaanavarkkum Seyaanai - பிரமன் முதலிய தேவர்களுக்கும் எட்டாதவனாயுமுள்ள எம்பெருமானே
நெஞ்சே, Nenchae - நெஞ்சமே!
சிறந்து, Siranthu - சிறப்புற
தொழுதால், Thozhudhaal - வணங்கினால்
பழுது உண்டே, Pazhudhu Undae - குற்ற மேதேனுமுண்டோ?