Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2307 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2307மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிக் கிட்டி ஆஸ்ரயிக்கத் தம் திரு உள்ளத்தை அவன் உகந்து அருளின நிலங்களில் காட்டில் விரும்பின படியை அருளிச் செய்கிறார் – ஸ்ரீ கோயில்களில் இருக்கிறது இசைந்தார் நெஞ்சிலே புகவிறே – அங்கன் இன்றிக்கே யசோதை பிராட்டி வெண்ணெயை விழுங்கும் காட்டில் நாம் பெற்றது ஏன் என்னில் ஸ்ரீ உகந்து அருளின தேசங்களிலே நமக்காக வந்து ஸூலபனானான் என்கிறார் -என்னவுமாம் தொழுதால் பழுதுண்டே என்றாரே இவர் இப்படிச் சொல்ல அவன் பேசாது இரானே – இப்படி கிட்டி ஆஸ்ரயித்த தம் திரு உள்ளத்தை உகந்து அருளின நிலங்களில் காட்டிலும் அவன் விரும்பின படியை யருளிச் செய்கிறார் – 26
சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்,
நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், – உறைந்ததுவும்,
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே,
தாம்கடவார் தண்டுழா யார்.
தண் துழாயார் தாம், Than Thuzhaayaar Thaam - குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமான்
கடவார், Kadavaar - ஒருநாளும் விட்டு நீங்காதவனாய்க்கொண்டு
உறைந்ததுவும், Uraindhathuvum - நித்யவாஸம் பண்ணுமிடங்கள் (எவையென்றால்)
சிறந்த என் சிந்தையும், Sirantha En Sindhaiyum - சிறந்ததான என்னுடைய நெஞ்சமும்
செம் கண் அரவும், Sem Kan Aravum - சிவந்த கண்களையுடைய திருவனந்தாழ்வானும்
நிறைந்த சீர், Niraindha Seer - நிறைந்த செல்வத்தையுடைய
நீள், Neel - பெரிய
கச்சியுள்ளும், Kachiyullum - கச்சித்திருப்பதியும்
வேங்கடமும், Vengadhamum - திருமலையும்
வெஃகாவும், Veghavum - திருவெஃகாவும்
வேளுக்கைப் பாடியுமே, Velukkai Paadiyume - திருவேளுக்கைத் திருப்பதியுமாம்.