| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2308 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரில் ஆரானும் ஒருவர் பாபபலம் புஜித்தார் உண்டு என்று இதுக்கு முன்பு எங்கேனும் கேட்டு அறிவதுண்டோ என்கிறது – ஒருவன் பாபபலம் புஜிய நின்று உள்ளவனை கெடுவாய் நீ ஒரு காலும் பகவத் சமாஸ்ரயணம் பண்ணிற்று இல்லையோ –என்பார் உண்டு இத்தனை இறே – கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ க்லேச நாசன -ஸ்ரீ விஷ்ணு தர்மம் கெடுவாய் நீ நல்ல வழி போய்த்திலை யாகாதே -உன்னை நீ கெடுத்துக் கொள்வதே – மித்ரா மௌபிகம் கர்த்தும் ராம ஸ்த்தானம் பரீப்சதா வதம் ச அநிச்சதா கோரம் த்வயா சௌ புருஷர்ஷப -சுந்தர -21-19- என்னக் கடவது இறே அனர்த்தத்தை வேண்டுவத்தைப் பண்ணிப் பரிகாரத்தில் இழிந்திலை யாகாதே – அவன் படி இதுவான பின்பு -அவனை ஆஸ்ரயித்தும் தங்கள் பண்ணின பாபத்தின் பலம் புஜிப்பார் யுண்டோ என்கிறார் – இப்படிப்பட்ட அவனை ஆஸ்ரயித்தவர்களில் யாரேனும் ஒருத்தர் -தங்கள் பண்ணின பாப பலம் புஜித்தார்களாகக் கேட்டு அறிவது யுண்டோ -என்கிறார் – 27 | ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார், காரே மலிந்த கருங் கடலை,- நேரே கடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி அடைந்தானை நாளும் அடைந்து. | கார் மலிந்த கரு கடலே, Kaar Malintha Karu Kadaley - மேகங்கள் நிறைந்த பெரிய கடலை நேரே கடைந்தானை, Nere Kadaindhaanai - தானே முன்னின்று கடைந்தவனும் நாரணனை, Naaranai - ஸகல ஜகத்காரண பூதனும் நீரு அணை மேல் பள்ளி அடைந்தானை, Neeru Anai Mel Palli Adaindhaanai - திருப்பாற்கடலில் (ஆதிசேஷனாகிற) சயனத்தின்மேல் பள்ளிக்கொண்டிருப்பவனுமான எம்பெருமானை நாளும் அடைந்து, Naalum Adaindhu - நாடோறும் பணிந்து (இருக்குமவர்கள்) துயர் உழந்தார், Thuyar Uzhandhaar - துக்கங்களுக்கு மூலமான பாபங்களைப் பண்ணினவர்களாயிருந்தாலும் துன்பு உற்றார் ஆர், Thunbu Utraar Aar - துக்கங்களை அநுபவித்தவர்கள் யார்? (ஒருவருமில்லை) (அப்படிப்பட்டவர்கள்) ஆண்டையார், Aandaiyaar - எங்கிருக்கிறார்கள்? (எங்குமில்லை) |