திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2309 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2309மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவர்கள் பண்ணின பாப பலம் இவர்களுக்கு புஜிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களை தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் – கீழ்-ஸ்ரீ வேங்கடமும் ஸ்ரீ வெக்காவும் ஸ்ரீ வேளுக்கைப் பாடியும் -என்ற பிரசங்கத்தாலே ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் – இவனைப் பற்றினார்க்கு பாப பலம் அனுபவிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களைத் தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் – 28
அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று மிடைந்தது பாரத வெம்போர், – உடைந்ததுவும் ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப் பேய்ச்சிபா லுண்ட பிரான்.
பதவுரை Show / Hide
வான் எயிறு, Vaan Eiyiru - வான்போன்ற பற்களையுடையளான
பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய
பால், Paal - முலைப்பாலை
உண்ட, Unda - உண்டு அவளை முடித்தவனான
பிரான், Piraan - ஸ்வாமியானவன்
அடைந்தது, Adaindhathu - பள்ளிக்கொண்டது
அரவு அணை மேல், Aravu Anai Mel - சேஷசயனத்தின் மேலாம்
அன்று, Andru - முன்னொரு காலத்தில்
ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக
மிடைந்தது, Midaindhathu - நெருங்க நடத்தினது
வெம் பாரதம் போர், Vem Bharatham Por - கடுமையான பாரதயுத்தமாம்,
உடைந்ததுவும், Udaindhathuvum - அஞ்சி நின்றதும்
ஆய்ச்சிபால், Aaychipaal - இடைச்சியான யசோதைப் பிராட்டியினிடத்துண்டான
மத்துக்கே, Maththukke - மத்துக்காகவாம்,
அம்மனே, Ammane - அந்தோ!