திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 231 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
231பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 9
தாய்மார் மோர் விற்கப் போவர் தகப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர் நீ ஆய்ப் பாடி இளங் கன்னி மார்களை நேர்படவே கொண்டு போதி காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-9
பதவுரை Show / Hide
தாய்மார்,Thaaymaar - (பெண்களை அகம் பார்க்க வைத்து விட்டு) தாய்மாரானவர்
மோர் விற்க,Mor Virkka - மோர் விற்பதற்கு
போவர்,Poovar - (வெளியூருக்குப்) போவர்கள்
தமப்பன்மார்,Thamappanmaar - (அப் பெண்களின்) தகப்பன் மாரானவர்
கன்று ஆ நிரை பின்பு போவர்,Kanru Aa Nirai Pinbu Poovar - இளம் பசுக் கூட்டங்களை மேய்க்கைக்காக அவற்றின் பின்னே போய் விடுவர்கள்
நீ-;,Nee - (அப்படிப்பட்ட ஸமயத்திலே) நீ
ஆய்ப்பாடி,Aayppaadi - இடைச்சேரியில்
இள கன்னிமார்களை,Ela Kannimaargalai - (தந்தம் வீடுகளில் தனியிருக்கின்ற) யுவதிகளான பெண்களை
நேர் பட,Ner Pada - நீ நினைத்தபடி
கொண்டு போதி,Kondu Pothi - (இஷ்டமான இடங்களில்) கொண்டு போகா நின்றாய்;
காய்வார்க்கு,Kaayvaarkku - (உன் மேல்)த்வேஷம் பாராட்டுகின்ற கம்ஸாதிகளுக்கு
என்றும் உகப்பனவே,Endrum Ukappanave - எந் நாளும் (வாயாரப் பழித்து) ஸந்தோஷப் படக் கூடிய செய்கைகளையே
செய்து,Seidhu - செய்து கொண்டு
கண்டார் கழற திரியும்,Kandaal Kalara Thiriyum - (உனக்கு) அநுகூலரா யுள்ளவர்களும் (உன்னை) வெறுத்துச் சொல்லும்படி திரியா நின்ற
ஆயா,Aayaa - ஆயனே!
உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன்