| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2310 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ யசோதைப் பிராட்டி ப்ரஸ்துதை யானவாறே அவளுடைய ச்நேஹத்தையும் குணங்களையும் சொல்லி அவளும் ஒருத்தியே -என்று கொண்டாடுகிறார் – கீழே உடைத்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கு-என்றாரே அச்சத்துக்கு இவன் பால் ஒப்பு இல்லாதாப் போலே ஸ்நேஹத்துக்கும் ஸ்ரீ யசோதைப் பிராட்டிக்கு ஒப்பில்லை – என்கிறது – கீழே-மிடைந்தது பாரத வெம்போர் -என்று ஆஸ்ரிதர்க்காக அவன் தன்னை அழிய மாறின படியைச் சொன்னாரே இதில் அவனுக்காக இவள் தன்னை அழிய மாறின படி சொல்லுகிறது – அச்சம் கெடுகை ஸ்த்ரீத்வம் அழிய மாறுகை–ஸ்த்ரீத்வ பிரயுக்தம் இறே அச்சம் – அச்சத்துக்கு இவனுக்கு ஒப்பு இல்லாதாப் போலே ஸ்நேஹத்துக்கு ஸ்ரீ யசோதை பிராட்டிக்கு ஒப்பு இல்லை -என்கிறார் – ப்ரஸ்துதையான ஸ்ரீ யசோதைப் பிராட்டி யினுடைய ஸ்நேஹ குணங்களைச் சொல்லி அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் – 29 | பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து, ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய், தெருளா மொழியானைச் சேர்ந்து. | பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய பால், Paal - முலைப்பாலை உண்ட, Unda - அமுதுசெய்த பெருமானை, Perumaanai - ஸ்வாமியானவனும் வாய்ந்த இருள் ஆர் திருமேனி, Vaindha Irul Aar Thirumeni - அமைந்த இருள்போன்ற திருமேனியை யுடையவனும் இனம் பவளம் செம்வாய், Inam Pavalam Semvaai - அழகிய பழம் போற்சிவந்த அதரத்தை யுடையவனும் தெருளா மொழியானை, Therula Mozhiyanaai - உருத்தெரியாத மழைலைச் சொற்களைச் சொல்லும் சிறு குழந்தையுமான கண்ணபிரானை சேர்ந்து, Serndhu - கிட்டி ஆய்ச்சி, Aaychi - யசோதையானவன் பேர்ந்து எடுத்து, Perndhu Eduthu - வாரியெடுத்தணைத்து கொண்டு அஞ்சாதே, Anjaadhe - சிறிதும் பயப்படாமல் முலை கொடுத்தான், Mulai Koduththaan - தன் முலையை உண்ணக் கொடுத்தான். |