| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2311 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவன் சந்நிஹிதன் ஆகையாலே அவள் ஸ்நேஹித்தாள் – இப்போது நமக்கு அவன் சந்நிஹிதன் அன்றே என்னில் அவன் சந்நிஹிதனான இடங்களைச் சொல்லுகிறார் – ஒரு கால விசேஷத்திலே ஒருத்திக்கு எளியனான இந்நிலை எல்லார்க்கும் உண்டாம்படி ஸ்ரீ கோயில்கள் எங்கும் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் – அவன் சந்நிஹிதன் ஆகையால் ஸ்நேஹித்தாள்-இப்போது நமக்கு சந்நிஹிதன் அன்றே என்னில் அவன் சந்நிஹிதனான இடங்கள் சொல்லுகிறார் – அன்று அங்கனே அவள் ஒருத்திக்கும் எளியனான நிலை எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் யுண்டாம் படி ஸ்ரீ கோயில்களில் எல்லாம் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் – 30 | சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம் நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, – வாய்ந்த மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி, இறைபாடி யாய இவை. | கடல், Kadal - திருப்பாற் கடலென்ன குடந்தை, Kudandhai - திருக்குடந்தை யென்ன வேங்கடம், Vengadam - திருமலையென்ன நேர்ந்த என் சிந்தை, Nerndha En Sindhai - நேர்பட்ட எனது ஹ்ருதயமென்ன நிறை விசும்பும், Nirai Visumbum - பரம்பின பரமபதமென்ன வாய்ந்த மறை, Vaindha Marai - அமைந்த வேதமென்ன பாடகம், Paadagam - திருப்பாடகமென்ன அனந்தன், Ananthan - ஆதிசேஸனென்ன ஆய இவை, Aaya Ivai - ஆசிய இவையெல்லாம் வண் துழாய் கண்ணி, Van Thuzhai Kanni - அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள திருமால் சேர்ந்த, Thirumaal Serndha - எம்பெருமான் நித்யவாஸம் பண்ணப்பெற்ற இறபாடி, Irabaadi - ராஜதானிகளாம். |