| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2312 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவ்வோ இடங்களிலே நிற்கிறவன் தான் ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணுமவனுமாய் ஸூசீலனுமாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார் கீழ்ச் சொன்ன ஸ்ரீ திருப்பதிகள் நெஞ்சை அனுவர்த்திக்கிற படி – இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும் புறையறக் கலக்கும் ஸீலாவான் கிடீர் -என்கிறார் 31 | இவையவன் கோயில் இரணியன தாகம், அவைசெய் தரியுருவ மானான், – செவிதெரியா நாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான் பாகத்தான் பாற்கடலு ளான். | இரணியனது, Iraniyanadhu - ஹிரண்யாஸுரனுடைய ஆகம், Aagam - மார்பை அவைசெய்து, Avaiseithu - இருபிஸவாக்க அரி உருவம் ஆனான், Ari Uruvam Aanaan - நரசிங்கமாகத் தோன்றினவனும் செவி தெரியா நாகத்தான், Sevi Theriyah Naagaththaan - கண்ணையே செவியாகவுடையனாகையாலே தனிப்பட செவி தெரியாமலிருக்கிற ஆதிசேஷனைப் படுக்கையாக வுடையவனும் நால் வேதத்து உள்ளான், Naal Vedaththul Laan - நான்கு வேதங்களுக்கும் பொருளாயிருப்பனும் நறவு என்றான் பாகத்தான், Naravu Endraan Paagaththaan - தேன்போன்ற கங்கையை ஏற்றுக் கொண்டவனான ருத்ரனைத் திருமேனியின் ஒரு பாகத்திலே உடையவனும் பாற்கடலுளான், Paar Kadalulaan - திருப்பாற்கடலில் பள்ளி கொள்பவனுமான அவன், Avan - அப்பெருமானுடைய கோயில் இவை, Koil Ivai - கோயில் கீழ்ப்பாட்டில் சொன்ன திருப்பதிகளாம். |