திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2313 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2313மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி சீலவானான இவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –என்கிறார் – இப்படி சீலவானான அவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார் 32
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும், நூற்கடலும் நுண்ணுல தாமரைமேல், – பாற்பட் டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான், குருந்தொசித்த கோபா லகன்.
பதவுரை Show / Hide
குருந்து, Kurundhu - குருந்த மாத்தை
ஒசித்த, Osiththa - முறித்தொழித்த
கோபாலகன், Kopalagan - கண்ணபிரான்
பால் கடலும், Paal Kadalum - திருப்பாற் கடலையும்
பாம்பும், Paambum - திருவனந்தாழ்வானையும்
பனி விசும்பும், Pani Visumbum - (ஸம்ஸாராதாபங்கள் தட்டாமல்) குளிர்ந்திருக்கிற பரமபதத்தையும்
நூல் கடலும், Nool Kadalum - கடல்போன்ற சாஸ்த்ரங்களையும்
துண் நூல தாமரை மேல்பால்பட்டிருந்தார் மனமும், Thun Nool Thaamarai Melpaalpatthirundhaar Manamum - ஸூக்ஷமமான சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்பட்ட ஹ்ருதய கமலத்திலே கரணங்களெல்லாம் ஊன்றியிருக்கும்படி யோகத்தில் நிலைநின்ற யோகிகளினுடைய நெஞ்சையும்
இடம் ஆக கொண்டான், Idam Aaga Kondonaan - வாஸஸ்தானமாகக் கொண்டிருக்கிறான்.