திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2314 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2314மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி இருக்கிறவன் அபேஷித்தார் அபேஷித்தது எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் – இவனுடைய உடைமை எல்லாம் பரார்த்தம் என்கிறது – இப்படி இருக்கிறவன் அபேக்ஷித்தார் அபேக்ஷித்தத்தை எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் – 33
பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம் மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, – மாலவ மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம் அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று.
பதவுரை Show / Hide
மேல் ஒரு நாள், Mel Oru Naal - முன்னொரு காலத்தில்
பாலகன் ஆய், Palagan Aay - சிறு குழந்தை வடிவமுடையனாகி
ஆல் இலை மேல், Aal Ilai Mel - ஆலந்தளிரிலே
உலகு எல்லாம், Ulaku Ellam - உலகங்களையெல்லா
பைய, Paiya - மெல்ல
மெய்ம்மெயே, Meimmaiye - உண்மையாகவே
உண்டவனே, Undavaney - அமுதுசெய்து கிடந்தவனே!
மாலவனே, Malavaney - ஸர்வாதிகளே!
நீ, Nee - இப்படிப்பட்ட நீ,
அன்று, Andru - அன்றொருநாள்
மந்தரத்தால், Mandharaththal - மந்தரமலையைக்கொண்டு
மா நீர கடல் கடைந்து, Maa Neera Kadal Kadaindhu - மிக்க நீரையுடைய கடலைக் கடைந்து
வான் அமுதம், Vaan Amudham - திவ்யமான அமிருதத்தை
அந்தரத்தார்க்கு, Andharaththarkku - தேவர்களுக்கு
ஈந்தாய், Eendhai - அளித்தாய்.