திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2315 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2315மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ காஞ்சி புரத்திலே பல ஸ்ரீ திருப்பதிகளிலே-நிற்பது-இருப்பது-கிடப்பதான இவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்து இதுக்கடி பண்டு திரு உலகு அளந்து அருளின ஸ்ரமத்தாலே வந்தது ஓன்று அன்றோ என்று கொண்டு அஞ்சுகிறார் – அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் என்று தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் – அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் -என்று தம்முடைய நெஞ்சைக் குறித்துச் சொல்கிறார் – ஸ்ரீ காஞ்சீ புரத்தில் பல திருப்பதிகளிலும் நிற்பது இருப்பது கிடப்பது ஆகிற அவன் படியை அனுசந்தித்து முன்பு திரு உலகு அளந்து அருளின போதை சிரமத்தாலே வந்ததாகக் கொண்டு அஞ்சுகிறார் – 34
அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல், நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், – அன்று கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்.
பதவுரை Show / Hide
நெஞ்சமே, Nenjamai - மனமே!
அன்று, Andru - முன்பொரு காலத்தில்
நின்று, Ninru - நின்றுகொண்டே
இவ்வுலகம், Ivvalugam - இவ்வுலகங்களையெல்லாம்
அளந்த, Alandha - அளந்ததனாலுண்டான
அசவே கொல், Asave Kol - சிரமத்தினாலேயோ
வேளுங்கை, Velaungai - திருவேளுக்கையிலே
இருந்து, Irundhu - வீற்றிருந்து
நீள் நகர் வாய், Neel Nagar Vaai - (திருவெஃகா வென்கிற) சிறந்த திருப்பதியில்
அன்று, Andru - ஒரு காலத்தில் கிடந்தானை
கேடு இல் சீரானை, Kedu Il Seeranaai - ஒரு காலு மழிவில்லாத திருக்குணங்களையுடையவனும்
முன், Mun - முன்னொருகால் கம்ஸனை
கடந்தானை, Kadandhaanai - கொண்டுறொழித்தவனுமான பெருமானை
காண், Kaan - ஸேவி