Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2316 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2316மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – நெஞ்சமே காண் என்று உபதேசித்தாரே கீழே –அதடியாக மற்றைக் கரணங்கள்-இவர் தம்மை ப்ரேரிக்கத் தொடங்கிற்றன- மனஸ் சஹ காரத்தோடேயாய் இருக்கும் இறே -அல்லாத இந்த்ரியங்களுக்கும் அனுபவம் – இந்த்ரியங்கள் தான் முற்பட்டு இவர் மூட்டும் அளவாய்த்து – நெஞ்சமே காண் என்று உபதேசித்தார் கீழ் -இந்திரியங்கள் தாம் முற்பட்டு இவரை மூட்டுமளவாயிற்று -என்கிறது – நெஞ்சமே காண் என்று உபதேசித்து -இவர் வாய் மூடுவதற்கு முன்னே சஷூராதியான பாஹ்ய கரணங்கள் தாம் முற்பட்டுத் தம்மையும் ப்ரேரித்துக் கொண்டு அங்கே மேல் விழுகிற படியைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார் – 35
காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு
பூண்டார் அகலத்தான் பொன்மேனி, – பாண்கண்
தொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற்
கழல்பாடி யாம்தொழுதும் கை.
கண்கள், Kankal - என்னுடைய கண்களானவை
கதிர் இலகு, Kathir Ilaku - ஒளிவிளங்கா நின்றுள்ள
பூண், Poon - திவாபணங்களையும்
தார், Thaar - மாலையையும்
அகலத்தான், Akalaththaan - திருமார்விலே உடையனான எம்பெருமானுடைய
பொன்மேணி, Ponmeeni - அழகிய திருமேனியை
காண் காண் என விரும்பும், Kaan Kaan En Virumbum - காணவேணுங் காணவேணுமென்று ஆசைப்படாநின்றன.
வண்டு, Vandu - வண்டுகளானவை
பாடி, Paadi - இசைப்பாடிக்கொண்டு
அறையும், Araiym - ஒலிசெய்யப்பெற்ற
தொங்கலான், Thongalaan - மாலையை யுடையனான அப்பெருமானுடைய
தொழில், Thozhil - சேஷ்டிதங்களை
பாண் கண் பாடி, Paan Kan Paadi - ராகத்திலே அமைத்துப்பாடி
யாம், Yaam - நாம்
கை, Kai - கைகளினாலே
செம் பொன் கழல் தொழுதும், Sem Pon Kazhal Thozhudum - சிவந்த பொன்போல் சிறந்த (அவனுடைய) திருவடிகளை வணங்குவோம்