திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2317 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2317மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – யாம் தொழுதும் என்றாரே –மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் – யாம் தொழுதும் என்று மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் – 36
கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம், வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய படைபரவ பாழி பனி நீ ருலகம், அடியளந்த மாயன் அவற்கு.
பதவுரை Show / Hide
பனி நீர் உலகம், Pani Neer Ulagam - குளிர்ந்த நீரையுடைய கடல்சூழ்ந்த உலகங்களை
அடி, Adi - தனது திருவடியினாலே
அளந்த, Alandha - அளந்துகொண்ட
மாயர் அவர்க்கு, Maayar Avarkku - ஆச்சரியச் செய்கையை யுடையரான அப்பெருமாளுக்கு
கனல் ஆழி, Kanal Aazhi - திக்ஷ்ணமான சக்கரமும்
கார் கடல் வாய் வெண் சங்கம், Kaar Kadal Vaai Ven Sangam - கருங்கடலில் தோன்றின வெளுத்த சங்கும்
வெண்ண, Venn - வெவ்விதான
கதை, Kathai - கதையும்
சார்ங்கம், Saarnggam - சார்ங்கமும்
வெம் சுடர்வாள், Vem Sudarvaal - வெவ்விய சுடரையுடைய நந்தகவாளும் ஆகிய
செய்ய படை, Seyya Padai - அழகிய இவ்வாயுதங்கள்
கைய, Kaiya - திருக்கையிலுள்ள,
பரவை, Paravai - கடலானது
பாழி, Paazhi - படுக்கையாயிருக்கின்றது.