| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2318 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்டவன் திருவடிகளிலே நான் ஒரு வழியாலே அடிமை புக்கேன் இங்கனே இருந்துள்ள நான் அவனை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணுகை அன்றிக்கே அவன் தானே என்னை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணா நின்றான் என்கிறார் – நாம் அடிமையில் அந்வயிக்க ஸுபரியைப் போலே அநேகம் வடிவு கொண்டு புஜிக்க ஆசைப்படா நின்றான் -என்கிறது – இப்படி தாம் அவனை அனுபவிக்கப் புக்கவாறே அவனும் தன் பெருமையைப் பாராமல் தம் பக்கலிலே அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு பல வடிவு கொண்டு தம்மை அனுபவியா நின்றான் என்கிறார் – 37 | அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான், உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும் பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம், திகழும் திருமார்வன் தான். | உவர்க்கும் கரு கடல் நீர் உள்ளான், Uvarkkum Karu Kadal Neer Ullaan - உப்புக்கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய் துவர்க்கும் பவளம் வாய் பூ மகளும், Thuvarkkum Pavalam Vaai Poo Magalum - சிவந்த பவளம் போன்ற வாயை யுடையளான பிராட்டியும் பல் மணி பூண், Pal Mani Poon - பலவகையான ரத்னங்களழுத்தின திருவாபரணங்களும் ஆரம், Aaram - ஹாரங்களும் திகழும், Thigazhum - விளங்கப்பெற்ற திருமார்வன் தான், Thirumaarvan Thaan - திருமார்பையுடையனான எம்பிரான் அகத்தான் புறத்தான், Agaththaan Puraththaan - உள்ளிலும் வெளியிலும் வாசியறக் கலந்திருக்கின்றான். அவற்கு, Avarukku - அப்படிப்பட்ட பெருமானுக்கு அடிமை பட்டேன், Adimai Patten - ஆட்பட்டவனானேன். |