திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2319 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2319மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி என்னை வந்து விரும்பினவன் தான் சால எளியான் ஒருவனோ-ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் என்கிறார் – இப்படி என்னை மேல் விழுந்து விரும்புகிறவன் ஒரு கா புருஷன் அல்லன் -ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் – 38
தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும், தானே தவவுருவும் தாரகையும், – தானே எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத் திருசுடரு மாய இறை.
பதவுரை Show / Hide
எவ் உருவும், Ev Uruvum - எல்லாப் பொருள்களும்
தன் உருவே, Than Uruve - அவன்றனக்கு சரீரமாகவேயிருக்கும்,
தவம் உருவும், Thavam Uruvum - தபஸ்ஸுபண்ணிப் புண்யசரீரமுடையராயிருக்கிற பிரமன் முதலானவர்களும்
தாரகையும், Thaarakaiyum - நக்ஷத்ரங்களும்
தானே, Thaaney - அவன்றன் வடிவாகவேயிருக்கும்,
எரி சுடரும், Eri Sudarum - ஜ்வலிக்கின்ற அக்நியும்
மால் வரையும், Maal Varaiyum - பெரிய குலபர்வதங்களும்
எண் திசையும், En Thisaikum - எட்டு திக்குகளும்
அண்டத்து, Andathu - மேலுலகிலுள்ள
இரு சுடரும், Iru Sudarum - சந்த்ரஸூர்யர்களும்
தானே ஆய இறை, Thane Aaya Irai - தனக்கு ப்ரகாரமாயிருக்கப்பெற்ற எம்பெருமான்
தனக்கு தானே உவமன், Thanakku Thane Uvaman - (ஒப்பற்றனாகையாலே) தனக்குத் தானே உபமானமாயிருப்பவன்.