திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 232 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 10 | தொத்தார் பூங்குழல் கன்னி யொருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூவேழு சென்ற பின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-10 | பதவுரை Show / Hideதொத்து ஆர்,Thothu Aar - கொத்தாய்ச் சேர்ந்திருந்துள்ள பூ,Poo - புஷ்பங்கள் அணியப் பெற்ற குழல்,Kuzhal - கூந்தலை யுடைய கன்னி ஒருத்தியை,Kanni Oruthiyai - ஒரு கன்னிகையை தடஞ்சோலை,Thadanchoalai - விசாலமானதொரு சோலையிலே இரா,Iraa - (நேற்று) இரவில் கொண்டு புக்கு,Kondu Pukku - அழைத்துக் கொண்டு போய் முத்து ஆர்,Muthu Aar - (அவளுடைய) முத்து வடமணிந்த கொங்கை,Kongai - ஸ்தநங்களோடு புணர்ந்து,Punarnthu - ஸம்ச்லேஷித்து விட்டு மூ ஏழு நாழிகை சென்ற பின்,Moo Ezhu Naaligai Senra Pin - மூன்று யாமங்கள் கடந்த பிறகு வந்தாய்,Vandhai - (வீட்டுக்கு) வந்து சேர்ந்தாய்; உன்னை,Unnai - (நீ இவ்வாறு தீமை செய்கையாலே) உன்னைக் குறித்து ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்,Oththaarkku Oththana Pesuvar - வேண்டுவார் வேண்டினபடி சொல்லுவார்கள்; உரப்ப,Urappa - (இப்படி அவர்கள் சொல்லாதிருக்கும்படி) (உன்னை) சிக்ஷிக்க நான்,Naan - (அபலையாகிய) நான் ஒன்றும்,Ondrum - கொஞ்சமும் மாட்டேன்,Matten - சக்தை யல்லேன்; அத்தா,Aththa - நாயனே! உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன் |