| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2320 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி ஜகதாகாரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திரு மலையிலே புகுந்து சந்நிஹிதனாய்ப் பின்பு என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் என்கிறார் – இப்படி ஜெகதாகாரனாய் நின்ற ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்- பின்பு எண் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் -என்கிறார் – 39 | இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய், மறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான், உள்ளத்தி னுள்ளே உளன். | இறை ஆய், Irai Aay - ஸர்வஸ்வாமியாய் நிலன் ஆகி, Nilan Aagi - பூமிக்கு அந்தர்யாமியாய் எண் திசையும் தான் ஆய், En Thisaiyum Thaan Aay - எட்டு திக்குக்களிலுமுண்டான ஸகல வஸ்துக்களையும் தனக்கு ப்ரகாரமாகவுடையனாய் மறை அய், Marai Aiy - வேதங்களுக்கு ப்ரவர்த்தகனாய் மறைபொருள் ஆய், Maraiporul Aay - அந்த வேதங்களின் பொருளாயிருப்பவனாய் வான் ஆய், Vaan Aay - நித்ய விபூதி நிர்வாஹகனாய் பிறை வாய்ந்த, Pirai Vaayndha - சந்திரபதத்தைக் கிட்டியிருப்பதும் வெள்ளம் அருவி, Vellam Aruvi - மிக்க ஜலத்தையுடைய அருவிகளினுடைய விளங்கு ஒலி, Vilangu Oli - விளங்குகின்ற கோஷத்தையுடைத்தான் நீர், Neer - நீரையுடையதுமான வேங்கடத்தான், Vengadaththaan - திருவேங்கட மாலையில் வாழ்பவனான எம்பெருமான் உள்ளத்தின் உள்ளே உளன், Ullaththin Ullae Ulan - என்னெஞ்சினுள்ளே இருக்கின்றான் |