Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2321 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2321மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய் என்கிறார் – இப்படி சர்வாதிகனானவன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் – 40
உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,
விண்ணெடுங்கக் கோடுயரும் வீங் கருவி வேங்கடத்தான்,
மண்ணெடுங்கத் தானளந்த மன்.
நல் நெஞ்சே, Nal Nenjee - எனக்குப் பாங்கான மனமே!
விண் ஒடுங்க, Vin Odunga - மேலுலகங்களெல்லாம் ஒரு முலையில் ஒதங்கும்படி
கோடு, Kodu - சிகரங்கள்
உயரும், Uyarium - உயர்ந்தோங்கி யிருக்கப்பெற்றதும்
வீங்கு அருவி, Veengu Aruvi - நிறைந்த அருவிகளையுடையதுமான
வேங்கடத் தான், Venkatat Than - திருமலையில் எழுந்தருளியிருப்பவனும்
மண், Man - பூமிப் பரப்பெல்லாம்
ஒடுங்க, Odunga - (திருவடியின் ஒரு பாகத்திலே) ஒருங்கிப் போம்படி
தான் அளந்த, Thaan Alandha - தான் அளந்து கொண்டவனுமான
மன், Man - ஸ்வாமியானவன்
உளன் கண்டாய், Ulan Kandaai - (நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்,
உத்தமன், Uththaman - புருஷோத்தமனான அப்பெருமான்
என்றும் உளன் கண்டாய், Endrum Ulan Kandaai - எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷைகொண்டு) இருக்கிறான்காண்,
உள்ளுவார் உள்ளத்து, Ulluvaar Ullaththu - ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய், Ulan Kandaai - நித்யவாஸம் பண்ணுமவன்காண்